கடும் புனலில் நீந்திய காமம் தனித்து தடுமாறி தத்தளித்து கரை ஏகிய போது புத்தராய் சிரித்தது.
5/12/2013
அம்மா இறந்த இந்த 2 வருடங்களில் இப்போது மாற்றியது 3 வது வீடு.ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது மூட்டைகள் பிரித்து அடுக்கேன் என்கிறது. எனக்கு அலுவலக வேலையே சரியாக இருப்பதால் தங்கை தான் எடுத்து வைக்கிறாள் பொறுமையாக ........... 10 வருடங்கள் கூட ஒரு வீட்டில் இருந்திருக்கிறோம் ! . ம்ம்...... ஒரே நாளில் பொருட்கள் எல்லாவற்றையும் தனியாகவே பாக் செய்து விடுவார்.அம்மா .. பரணில் இருப்பதை மட்டும் எடுத்து தந்தால் போதும். புது வீட்டுக்கு வந்த அந்த இரவே சமையலறையை ஒழுங்கு படுத்திவிடுவார். மறுநாள் அலுவலகம் சென்று திரும்புவதற்குள் வீட்டில் எல்லா பொருட்களும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் . புது வீடு சீக்கிரம் பழகிய வீடாகிவிடும்..
அம்மாவின் நேர்த்தி, ஒழுங்கு, உழைப்பு, துரிதம் எல்லாமே எப்போதும் பிரமிப்பாய் இருக்கும் . இதுவே அவர் மேல் ஒரு மதிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்திவிடும்.
இன்று "'அன்னையர் தினம் '"அம்மா இருந்த போது அல்ல. இறந்த பின்பே அவரின் மாண்பு புரிகிறது......