அலாதியாய்
அநாதியாய்
அமைதியாய்
அடக்கி
அடங்கிவிடும்.
ஆசையாய்
ஆணவமாய்
ஆர்ப்பரிக்கும்
ஆதரிக்கும்
ஆட்டிவைக்கும்.
கருணை
கம்பீரம்
கலகம்
குரூரம்
கயமை
காதல்
மொழிவன
பாசம்
பகட்டு
பொய்
புகழ்
பாவம்
பகை
பாராட்டுவன
வன்மம்
வசீகரம்
வக்கிரம்
வாத்சல்யம்
வருத்தம்.
நிரம்பியன.
மெய்மை
மயக்கம்
மகிழ்வு
மதிப்பு
மனபிறழ்வு
மரணமும்
தரவல்லது
சொற்கள்.........
பிரயோகமாகும்
தருணம்
தக்க பதிலை
தேடி தொலைத்து
விடுகிறேன்
என் சொற்களாலான
என்னை.
3 கருத்துகள்:
ஒற்றை வரி
கவிதைகள்
வித்தியாசமான
உத்தி...
தொடர்க
கவிமொழி வாயடைக்கச் செய்கிறது என்னையும். கருத்து ஆமோதிக்கச் செய்யுமளவு ஆழம்.
இனிய புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள் தோழி... குறுஞ்செய்தி வாழ்த்துகள் கிடைக்கப் பெற்றேன். தொடர்பு கொள்ள இயலாமல் தடங்கல் ஏற்பட்டது இருமுறை. மனத்தொடர்பில் சற்றும் மாற்றமில்லை எப்போதும் போல்.
கருத்துரையிடுக