2/14/2012

      நெஞ்சு தாளாது,
      கண்  வழி  யத்தனிக்கும்.
       பற்றிக்கொள்ள  விரல்கள்
        பரிதவிக்கும்.

      களைத்தும் ,
      துவண்டும் ,
       பின்னும்  கால்கள்.

       புறம் மறந்து
       அகவயப்படும்
       கணங்களில்,
      பொன்னரளியின்
      பொதிந்த  தேனை
      பருகிப்  பறக்கும்
      சிறு  கருங்குருவியாய்
                நான்.


3 கருத்துகள்:

நிலாமகள் சொன்னது…

புறம் மறந்து
அகவயப்படும்
கணங்களில்//

உங்க‌ள் க‌விதைக‌ளில் தேர்ந்தெடுக்கும் இலாவ‌க‌மான‌ சொற்க‌ள் இர‌சிக்க‌த் த‌க்க‌வை.

ரிஷபன் சொன்னது…

பொன்னரளியின்
பொதிந்த தேனை
பருகிப் பறக்கும்
சிறு கருங்குருவியாய்
நான்.


ஆஹா.. சபாஷ்.

ஹேமா சொன்னது…

அருமை...காதல் மயக்கம்.நம்மை நாம் மறக்கும் நிலையில் கருங்குருவியாயும் இருக்கலாம் !

                        மௌன  குறு வாளின்                          குதர்க்கம்                          குறுக்கறுத்து                     ...