4/10/2011

      வறுமை 
       வலி
       வேதனையை 
       விழுங்கிச் 
                           செரித்தோம்   
       வாழ்வு 
       களிப்புற..............
       
      அவரவர் 
      அபிலாஷைகளில் 
      அநாதியாய்
     அலைந்துழன்றோம் 

     பிராயங்களில் 
     சண்டைப்  போட்ட  
     மரப்பாச்சி 
                          ---  இன்று 
   ஆளுக்கொன்று  
   வாங்கிட 
    வகையிருந்தும்
    வசமாகுதில்லை  

7 கருத்துகள்:

நெய்வேலி பாரதிக்குமார் சொன்னது…

வறுமை நம் வசமிருந்தபோது வாழ்க்கை நம் வசமிருந்தது...போராடும் போது பிணைக்க கைகளின் தேவையும் இருந்தது .. வறுமை போய் வசதி வந்தபின் வாழ்க்கை வெறுமையானது.. கவிதை அருமை .. மரப்பாச்சியை இனி பார்க்கும் தோறும் உங்கள் கவிதை நினைவுக்கு வரும்

manichudar blogspot.com சொன்னது…

தோழமை வணக்கம். நன்றி பாரதிக்குமார். நல்ல புரிதல். அழகான விமர்சனம்.

www.eraaedwin.com சொன்னது…

முதலில் ஒன்றை சொல்லிவிட வேண்டும் தோழர்,
வலை மிக அழகாக வந்துள்ளது. இதுதான் வாழ்க்கை தோழர். கொஞ்சம் நிறைய எழுதுங்கள்.

Amirtham surya சொன்னது…

எழுத்தை கைப்பற்றும் வரத்தை பெற்றிருக்கிறீர்கள் தோழி.தொடர்ந்து எழுதுங்கள்.வாசிக்க..நல்ல ரசிகன்
நானுண்டு.வாழ்த்துக்கள்

manichudar blogspot.com சொன்னது…

நன்றி தோழர் தங்கள் வாழ்த்துக்களுக்கு. உற்சாகமாகிறேன் வாய்ப்புகள் வசமாகா வாழ்க்கையிலும்...

ரிஷபன் சொன்னது…

பிராயங்களில்
சண்டைப் போட்ட
மரப்பாச்சி
--- இன்று
ஆளுக்கொன்று
வாங்கிட
வகையிருந்தும்
வசமாகுதில்லை

ஆஹா.. என்ன அழகாய் சொல்லி விட்டீர்கள்..

குறையொன்றுமில்லை. சொன்னது…

நல்லகவிதை வாழ்த்துக்கள்.

                        மௌன  குறு வாளின்                          குதர்க்கம்                          குறுக்கறுத்து                     ...