3/11/2011

            சுகன்  நல்ல  நண்பர்,  அவரது   அம்மாவோ  மிகவும்  அணுக்கமானவர். அதனால்  சுகன் உடனான  எனது  நட்பு  இன்னும்  பலமானது. என்று  கூறலாம். 
                        சுகன்  அம்மா  நினைவில் ..........


விட்டு விட்டுப்  போனாலும் 
விலகாத   நினைவுகளில் 
ஆழ்வதும்,
 ஆற்றுப்படுதலும்
 மீள்வதுமாக
 காலத்  தோணி
                                        __எனைக் 
 கடத்திப்   போனாலும் 
 கல்வெட்டாய்    மனதில் 
 கனமான  பதிவுகள் 
 கடந்தும்  விடக்  கூடுமோ?
 கணந்தோறும் 
 அல்லவேனும் 
 மறக்க  முடியாத 
 நினைவுகளின்   பிடியில் 
 ததும்புகிறேன் 
 நான்!
                   09 / 03 /2009  அம்மாவின்  நினைவு  நாளில்  வாசித்தது.
 
 













 

4 கருத்துகள்:

நெய்வேலி பாரதிக்குமார் சொன்னது…

நன்றி மணிச்சுடர் ,,, உங்கள் profile வழியாக உள் நுழையும்போது my blogs -ல் இரண்டு மணிச்சுடர் என வலைப்பூ முகவரி வருகிறது ... அதில் ஒன்றின் வழியாக செல்லும்போது இடுகைகள் இல்லை என்று வருகிறது என்பதை நேற்றுதான் அறிந்தேன் ... இரண்டாவது முகவரி வழியாக செல்லும்போது மிக சரியாக வருகிறது

நெய்வேலி பாரதிக்குமார் சொன்னது…

சுகனின் தாயார் நினைவு நாள் நிகழ்ச்சியில் நீங்கள் வாசித்த கவிதை நெகிழ்ச்சி . அவர் சுகனுக்கு மட்டுமல்ல ... சுகன் படைப்பாளிகளுக்கும் தாயார்தான் ... ஆரம்பக்காலங்களில் அவர் ஆதரவு இல்லையெனில் சுகன் இதழும் இல்லை இன்றைக்கும் சுகனை இயக்குவது சுகனின் தன்னம்பிக்கை மட்டுமல்ல அவரது தாயாரின் ஆன்மாவும்தான் ...

manichudar blogspot.com சொன்னது…

ஆம். சரியாக சொன்னீர்கள் . சுகனின் நண்பர்கள் என்று யார் வந்தாலும் அவருடைய கனிவான உபசரிப்பும், என்மேல் சமயத்தில் காட்டும் கண்டிப்பும் எனக்கு மிகவும் பிடித்த மார்க்சீம் கார்கியின் "தாய் " யை அவர் வடிவில் நான் தரிசித்து உள்ளேன்

www.eraaedwin.com சொன்னது…

அம்மான்னா அம்மாதான் தோழர். சென்னையில் இருந்ததால் வர இயலாது போனது. ஈரம் வற்றாது சுரந்த அந்த நெஞ்சத்தில் எனக்கும் மிக சன்னமாய் ஒரு இடம் இருந்தது. அம்மாவுக்கும் என்னைத் தெரியும் என்பதேகூட தித்திப்பான சுவைதான்.

"ஊருல எங்க
நாட்டுல எங்க
காட்டுங்க
எங்க தாய் போல "
என்பது எல்லாத் அம்மாக்களுக்கும் பொருந்தும்தான். ஆனாலும் சுகனது அம்மாவிறு கொஞ்சம் கூடுதலாய்ப் பொருந்தும்

                        மௌன  குறு வாளின்                          குதர்க்கம்                          குறுக்கறுத்து                     ...