உன்
வட்டம்
பார்வை
கோணம்
என்னுள் விளைக்கும்
இம்சை
இன்னது தான் என்றில்லை.
எனது ' நான் '
எனக்கே
புரிபடாதிருக்கையில்
உனது புரிதலில்
உடன்பாடில்லை.
உன் பிம்பமாக்கி
என்னை தொலைக்கும்
உன் முயற்சிகளில்.
பெற்றவளாய் முடியல;
போராளியாய் போற்றுவேன்.
1 கருத்து:
உன் பிம்பமாக்கி
என்னை தொலைக்கும்
உன் முயற்சிகளில்.
பெற்றவளாய் முடியல;
போராளியாய் போற்றுவேன்..
அடுத்தவர் பார்வையில் இருந்து சரியான மதிப்பீடும் தரும் அழகுக் கவிதை
கருத்துரையிடுக