பூப்பேன்........
காயப்பேன்.....
வளர்தல் பிழை
---என
அளவாய் ,
அழகாய்
வெட்டப்படும்
போன்சாய்
---அல்ல,
விழுதிறக்கி,
மண்ணுள்
ஊடுருவி
நிலைக்கும்
ஆல்(ள்)
---நான்.........
1 கருத்து:
விழுதிறக்கி,
மண்ணுள்
ஊடுருவி
நிலைக்கும்
ஆல்(ள்)
என்னுள்ளும் இறங்கி நிலைத்து விட்ட வரிகள்.. உங்கள் கவிதை ஆள்(ளுமையின்) சக்தி.
கருத்துரையிடுக