வன்ம வார்த்தைகள்
விஷம் தோய்ந்த
அம்புகளாய்
குறிப்பார்த்து
எய்யப்படுகின்றன.............
இவருக்குள்
அவரும்
அவருக்குள்
இவரும்
ஆற்றாமையின்
செத்தப் பாம்பை
அடித்துத்
துவைக்கிறார்கள் .......
தீர்ந்து விடுமோ
எல்லாமும்!
சுட்ட வெண்சங்காய்
பளீரிடுகிறது
இயலாமையின்
ஆதங்கங்கள்.