தேவைகள்
அவரவருக்கானவை.
வசதி, வாய்ப்பு ,
நட்பு, காதல்,
மரியாதை,
நாகரிக நிமித்தம்
பரிசீலிக்கப்படவும்,
மறுக்கப்படவும்,
மறைக்கப்படவும்
ஆகலாம் .....ஆனால்
பரிகசிக்கப்படும்போது
பரிதாபப்படுகிறேன்
உனக்காக.......
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மௌன குறு வாளின் குதர்க்கம் குறுக்கறுத்து ...
-
வறுமை வலி வேதனையை விழுங்கிச் செரித்தோம் வாழ்வு களிப்புற.............
-
அம்மா அப்பா தங்கை தம்பி மகன் மகள் உறவு நட்பு காதல் எல்லாருமே அவரவர்க்கான --என் சட்டகங்களில் பொருந்துவதே இல்லை. எனக்கேயான ...
-
வன்ம வார்த்தைகள் விஷம் தோய்ந்த ...
1 கருத்து:
பரிகசிக்கப்படும்போது உனக்காக..
நீதான் செய்யவேண்டும்
நீந்தி கடந்த
தூரம் பெரிதல்ல
மீனுக்கு
என்றாவது
கரைமீது விலுந்துவிட்டால்
தவ்வி குதித்து
தண்ணீருக்குள் வரவேண்டும்
அதுதான் அரிது
உயிர் பயம்
உள்ளூக்குள் இருந்து - ஒரு
உந்துதல் தரும்
உனக்கே தெரியாது
நீ
இத்தனை உயரம்
துள்ளி குதிப்பாய் என்று
ஆடிய ஆட்டமும்
பாடிய பாட்டும்
அத்துனை மகிழ்ச்சியும்
அடியோடு மறந்துபபோகும்
உச்சந்தலையில் - ஓர்
அடி விழுந்தால்
மகிழ்ச்சியை
தாங்கி நிற்கவோ - இல்லை
மரண வலி
தவிர்த்து நிற்கவோ
நிச்சயம்
நீதான் செய்யவேண்டும்
நிமிர்ந்து நிற்பதையும் - என்றும்
உயர்ந்தே நிற்பதையும்.
கருத்துரையிடுக