2/14/2012

      நெஞ்சு தாளாது,
      கண்  வழி  யத்தனிக்கும்.
       பற்றிக்கொள்ள  விரல்கள்
        பரிதவிக்கும்.

      களைத்தும் ,
      துவண்டும் ,
       பின்னும்  கால்கள்.

       புறம் மறந்து
       அகவயப்படும்
       கணங்களில்,
      பொன்னரளியின்
      பொதிந்த  தேனை
      பருகிப்  பறக்கும்
      சிறு  கருங்குருவியாய்
                நான்.


             சூரிய  பனி
              நிலவு  மாடி
              மேக ஓவியம்
              தாளத் தூறல்
              சவுக்கிய  சங்கீதம்
              பரிஜாத மணம்
              பசுந்துளிர்
              தளிர்மழலை
             கிளர்த்தும்  காதல்
                    விரியும்
            சுகானுபவங்கள்  சாத்தியமாகும்
            பிரபஞ்ச  நேசம்  வாய்ப்பாகையில்!  

                        மௌன  குறு வாளின்                          குதர்க்கம்                          குறுக்கறுத்து                     ...