12/24/2010

                  

ஆரம் விழுந்திடும்பான்ற
அக்காவின் அக்கறை
பாசியாவது  போடுங்களேன்
பரிச்சியமான  பெண்மணி
தாலிமட்டுந்தான்  கட்டுவியோ  `ங்கற
மாமியின்  கிண்டல்
மூளி  அலங்காரி   என்கிற
முரட்டு தம்பி
அறுத்த முண்டையாட்டம்
அம்மாவின்  ஏச்சு
ரசிக்க  ஒருவர்  இல்லாததாலா
என்கிறார்  நண்பர் ....
அவரவர்களும்  
கழுத்தணியை
மாட்டிவிடத்தான்
மடக்குகிறார்கள்
                      சங்கிலிக்குள்
                      சிக்காத ஒரு
                       கழுத்தில்.....






  

1 கருத்து:

கிருஷ்ணப்ரியா சொன்னது…

ஆஹா..... ஒரு வழியா தொடங்கி விட்டீர்கள்.... அருமை மணிச்சுடர்.இத்தனை கூர்மையான வார்த்தைகளை தயவு செய்து இனியும் தூங்க விடாதீர்கள்...

                        மௌன  குறு வாளின்                          குதர்க்கம்                          குறுக்கறுத்து                     ...