10 வருடங்கள் கூட ஒரு வீட்டில் இருந்திருக்கிறோம் ! . ம்ம்...... ஒரே நாளில் பொருட்கள் எல்லாவற்றையும் தனியாகவே பாக் செய்து விடுவார்.அம்மா .. பரணில் இருப்பதை மட்டும் எடுத்து தந்தால் போதும். புது வீட்டுக்கு வந்த அந்த இரவே சமையலறையை ஒழுங்கு படுத்திவிடுவார். மறுநாள் அலுவலகம் சென்று திரும்புவதற்குள் வீட்டில் எல்லா பொருட்களும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் . புது வீடு சீக்கிரம் பழகிய வீடாகிவிடும்..
அம்மாவின் நேர்த்தி, ஒழுங்கு, உழைப்பு, துரிதம் எல்லாமே எப்போதும் பிரமிப்பாய் இருக்கும் . இதுவே அவர் மேல் ஒரு மதிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்திவிடும்.
இன்று "'அன்னையர் தினம் '"அம்மா இருந்த போது அல்ல. இறந்த பின்பே அவரின் மாண்பு புரிகிறது......
கடமைகள் குறித்த
கவலை அவ்வளவாய்
இல்லவேயில்லை..
துன்பங்கள்
துயரங்கள்
துக்கிகவேயில்லை
பிரளயமாய்
பிரச்சனைகள்
பொருட்டேயில்லை .
தாக்குதலின்
தீவிரம்
தாங்கி
கவசமாய்
இருந்தார்
அம்மா .